புத்தகம் ஒரு பார்வை - “வீரயுக நாயகன் வேள்பாரி”- சு வெங்கடேசன்
குதிரையின் அழகை சொல்லும் போது … . “ மயிலும் குதிரையும் தனது மொத்த அழகையும் நீண்டு திருப்பும் கழுத்தில் வைத்திருக்கிறது ” பாதவிரல் பற்றிய சிந்தனை .. நீலன் கபிலரிடம் சொல்லும் போது ... …. “ எங்களின் பாதங்கள் மண்ணைப் பிடித்து நடந்து பழகியவை . சமவெளியில் வாழும் உங்களின் பாதங்கள் மண்ணில் தேய்த்து நடந்து பழகியவை . பாதடியைக் கழட்டிவிட்டுப் பாதத்தை முன்னெடுத்து வையுங்கள் . பற்களைப்போல் விரல்களுக்கும் கவ்விப்பிடிக்கத் தெரியும் ” வேர்களை பற்றிய சிந்தனை.. நீலன் கபிலரிடம் சொல்லும் போது.. “ நாங்கள் மரத்தின் வேர்களை மரகொம்புகள் என்றுதான் சொல்லுவோம் மரம் மேல் நோக்கி வளருவது அல்ல... கீழ் நோக்கி வளருவது . இருகிய மண்ணையும் கரும்பாறையும் தனது கொம்புகளால் பிளந்துகொண்டு அது உள்செல்கிறது. மரத்தின் முழு ஆற்றலும் அதன் கொம்புகளில்தான் இருக்கிறது. உடலைவிட நீளமானவை அதன் கொம்புகள். ” புகழ்ச்சி பற்றிய வெங்கடேசன் அவர்ளின் கருத்து...... “ எல்லோராலும் அதிகம் புகழப்படும் ஒர் இடத்தில் பிழைகள் மலிந்திருக்கும் . யாருடைய கவனத்தையும் சிதைக...