புத்தகம் ஒரு பார்வை - “வீரயுக நாயகன் வேள்பாரி”- சு வெங்கடேசன்
குதிரையின் அழகை சொல்லும் போது….
“மயிலும் குதிரையும் தனது மொத்த அழகையும் நீண்டு திருப்பும் கழுத்தில் வைத்திருக்கிறது”
பாதவிரல் பற்றிய சிந்தனை.. நீலன் கபிலரிடம் சொல்லும் போது... ….
“எங்களின் பாதங்கள் மண்ணைப் பிடித்து நடந்து பழகியவை. சமவெளியில் வாழும் உங்களின் பாதங்கள் மண்ணில் தேய்த்து நடந்து பழகியவை.
பாதடியைக் கழட்டிவிட்டுப் பாதத்தை முன்னெடுத்து வையுங்கள்.
பற்களைப்போல் விரல்களுக்கும் கவ்விப்பிடிக்கத் தெரியும்”
வேர்களை பற்றிய சிந்தனை.. நீலன் கபிலரிடம் சொல்லும் போது..
“நாங்கள் மரத்தின் வேர்களை மரகொம்புகள் என்றுதான் சொல்லுவோம்
மரம் மேல் நோக்கி வளருவது அல்ல... கீழ் நோக்கி வளருவது.
இருகிய மண்ணையும் கரும்பாறையும் தனது கொம்புகளால் பிளந்துகொண்டு அது உள்செல்கிறது.
மரத்தின் முழு ஆற்றலும் அதன் கொம்புகளில்தான் இருக்கிறது.
உடலைவிட நீளமானவை அதன் கொம்புகள்.”
புகழ்ச்சி
பற்றிய வெங்கடேசன் அவர்ளின் கருத்து......
“எல்லோராலும் அதிகம் புகழப்படும் ஒர் இடத்தில் பிழைகள்
மலிந்திருக்கும்.
யாருடைய கவனத்தையும் சிதைக்கும் ஆற்றல் புகழுக்கு
உண்டு.”
பாதையை பற்றிய வெங்கடேசன் அவர்ளின் கருத்து......
பாதையை முறையற்று வைத்திருப்பது அரச
குற்றம். கைவிடப்பட்ட பாதையால், வணிகம் வளராது.
வணிகம் பெருகாத நாட்டில், வளம் கூடாது.வளமற்ற நாட்டில்
நிறைந்திருப்பது மக்களின் கண்ணீர்த் துளிகளே.
Comments
Post a Comment