ஸ்ரீ அனுமன் சாலீசா(அனுமன் நாற்பது ) (HANUMAN CHALISA)

ஸ்ரீ அனுமன் சாலீசா ஸ்ரீ ஹநூமதே நம: ஸ்ரீ ஹநுமாந் சாலீஸா (அனுமன் நாற்பது ) தோஹா 1 ஸ்ரீ குருவின் பாதாரவிந்தங்களின் மகரந்தப் பொடிகளால் என் மனக் கண்ணாடியைத் தூய்மைப்படுத்தி நான்கு விதமான தர்மம், அர்த்தம், காமம் , மோஷம் ) புருஷார்த்தங்களையும் கொடுக்கும். ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியின் நிர்மலமான புகழை வர்ணிக்கிறேன் . தோஹா 2 ஹே வாயுகுமாரனே! நான் தங்களைத் தியானம் செய்கின்றேன். என்னுடைய உடலும் அறிவும் பலம் குறைந்தவை என்பதைத் தாங்கள் அறிவீர்கள். எனக்கு உடல் ஆற்றலையும் ,நல்ல புத்தியையும், அறிவையும் கொடுங்கள் என்னுடைய அனைத்து க்லேசங்களையும் ,விகாரங்களையும் அழித்துவிடுங்கள். (க்லேசம்- அறிவு இன்மை, அதாவது அவித்யா. ராக, த்வேஷ் , அபிநிவேச -க்லேசங்கள் , விகாரங்கள் - பிறப்பு , இறப்பு என்கின்ற சம்சாரமாகிய கடலின் துன்பச் சுழற்சியில் இருந்து விடுபடுதல், இதற்கு ஆறு மாற்றங்கள் உண்டு.) சௌபா ஈ 1. 1. ஸ்ரீ ஹனுமான் அவர்களே! தங்களுக்கு வெற்றி உண்டாகட்டும் . தங்களுடைய ஞானமும், குணமும் ஆழம் காண முடியாதவை. ...