கந்த சஷ்டி கவசம் - Kandha Sasti Kavasam
Kandha Sasti Kavasam கந்த சஷ்டி கவசம் காப்பு துதிப்போர்க்கு வல்வினைபோம் , துன்பம்போம் ; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் – கதித்து ஓங்கும் ; நிஷ்டையுங் கைகூடும் ; நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந்தனை . குறள் வெண்பா அமரர் இடர் தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி .. நூல் சஷ்டியை நோக்கச் சரவணபவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணியாட மையல் நடம் செய்யும் மயில்வாகனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வர வர வேலாயுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலாய் எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக சரவணபவனார் சடுதியில் வருக ரகணபவச ரரரர ரரர ரிகண பவச ரிரிரி ரிரிரி விணபவ சரவண வீராநமோ நம நிபவ சரவண நிற நிற நிறென் வசர ஹணபவ வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக எ...
Comments
Post a Comment