இந்த கடினமான சூழ்நிலையில் உயிர் காக்கும் 3 மஹா மந்திரங்கள்(mantras for humans to safe in life for this critical situation)
வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க போகின்ற பேச போகின்ற தலைப்பு 'இதுவும் கடந்து போகும்' என்பது பற்றி…
இந்த
தலைப்புக்குள்ள அப்படி என்ன இருக்கு என்று நினைக்குற நண்பர்கள் மற்றும் பார்த்து
கொண்டிருக்கும் நண்பர்கள் தயவு செய்து இந்த பதிவு அனைத்தையும் பாருங்கள்.
மிக முக்கிய
உயிர் காக்கும் மூன்று மந்திரங்கள் பற்றி பேசப்போகிறாம்.
இந்த மாதிரி
தலைப்பு மற்றும் மந்திரங்கள் எல்லாம் பேசவேண்டாம் என்று நினைத்தாலும், இன்று இருக்கும் நம் நிலைமை மற்றும்
சுற்றுப்புற சூழல், என்னை இதைப்பற்றிய பதிவை
பதியவேண்டிய கட்டாயம் நிலைக்கு தள்ளி உள்ளது.
ஆம்., இந்த
கொரானா சென்ற ஆண்டுதான் நம்மளை மனரீதியாகவும் பொருளாதர நிலையிலும் வருத்தியது
என்றாலும் நாமும் பல்வேறு சுயகட்டுப்பாடுகளாலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளாலும் அதை
போராடி வென்றாலும் மீண்டும் இந்த முறை சற்று வலுவான முறையில் முந்தய நிலையை விட மிகவும்
கொடிய தொற்றாக உருவெடுத்து நம்மைளை பாடாய் படுத்துகிறது.
அதுவும் பல மனித
உயிர்களை வாரி கொண்டு போகிறது.
அதுவும்
சுவாசிக்க ஆக்ஸிஜன் இல்லாமல் நம் இந்தியாவில் உயிர் போவது மிகவும் கொடுமை.
பல நாடுகள்
நம்மேல் பரிதாபப்பட்டு பல உதவிகளை செய்து கொண்டிருக்கின்றன.
இந்த இரண்டாவது
அலை அந்த அளவுக்கு தாக்கத்தை மீண்டும் நம் மனதளவில் மற்றும் பல குடும்பங்களை
ஆதரவின்றி நிற்க வைத்து உள்ளது.
இந்த நிலைமையில், நாம் பயந்து உள்ள மக்களுக்கு கொடுக்க
வேண்டியது நம்பிக்கை இதுவும் கடந்து போகும் என்கின்ற வாசகம்.
இந்த நாளில்
மிகவும் தேவையான வாசகம்.
கண்டிப்பாக இடை
கடக்க முடியும் நாம் இந்தியர்கள் அதுவும் தமிழர்கள்.
நமக்கு
இயற்கையாகவே பல எதிப்பு சக்திகள் மீண்டு எழும் திறன் உள்ளவர்கள்.
இந்த நிலைமையில்
நாம் பயந்து உள்ள மக்களுக்கு கொடுக்க வேண்டியது நம்பிக்கை இதுவும் கடந்து போகும்
என்கின்ற வாசகம் இந்த நாளில் மிகவும் தேவையான வாசகம் கண்டிப்பாக இடை கடக்க
முடியும் நாம் இந்தியர்கள் அதுவும் தமிழர்கள் நமக்கு இயற்கையாகவே பல எதிப்பு
சக்திகள் மீண்டு எழும் திறன் உள்ளவர்கள்.
இதை கேட்க்க
கூடிய நாம் இன்னொன்றையும் செய்ய வேண்டும்.
அது என்னவென்றால்
கடவுள் நம்பிக்கை.
என்னடா கடவுள்
சாமின்னு சொல்ராங்க நினைப்பீங்க சாமிதான் இந்த வியாதி தந்திருக்குக்கு அவராலே
தடுக்க முடியல நினைப்பீங்க.
ஆனால்
இதையெல்லாம் கடவுள் செய்யவில்லை.
நாம்தான் காரணம்
இயர்கைக்கு புறம்பாக பல செயல்களை செய்ய ஆரம்பித்தோம் அதன் விளைவுகளை நாம் அனுபவித்து
கொண்டிருக்கிறோம்.
உதாரணமாக OXYZEN, மரத்தை வெட்டும்போது நாம் யோசிக்கவில்லை. OXYZEN இல்லாம போன என்னபண்றது எங்கயாவுது விலை கொடுத்து வாங்கிக்கலாம்ன்னு நினைச்சோம். இப்போ நிலைமை காசு கொடுத்தாலும் இல்லை.
சரிங்க., அதையெல்லாம் இப்ப பேசவேண்டாம் உங்க தப்பு என்
தப்பு பேசி பயன் இல்லை.
இப்பயிருக்கிற
நிலைமை படு மோசமான நிலை இப்ப நமக்கு கடவுளை தவிர வேறு கதியும் இல்லை. அப்படித்தான் நான் சொல்லுவேன்.
அதனால நாம் இப்ப
நம் முன்னோர்களால் சொல்லப்பட்ட இரண்டு மிக சக்திவாய்ந்த மந்திரங்களை சொல்ல
வேண்டும்.
சிவபெருமானின் உடைய உயிர் காக்கும் மந்திரம்
மஹா மந்திரம்.
இது ஒரு உயிரை காக்க கூடிய மந்திரமாக பல
சித்தர்களால் சொல்லப்படுகிறது.
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய
மாம்ருதாத்
அடுத்து தன்வந்திரி மந்திரம் அவரை பற்றி
எல்லாருக்கும் தெரியும.
விஷ்ணு அவதாரமான தன்வந்திரி ஆரோக்கியத்தின்
கடவுள்.
ஓம் நமோ பகவதே
வாசுதேவயா தன்வந்த்ரயே
அமிர்தகலாஷா ஹஸ்தியா
சர்வாமய வினஷானயா
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மகாவிஷ்ணுவே நமஹ:
எல்லாம் வட மொழியில் எழுதப்பட்டிருக்கவே கடினமாக
இருந்தால் தமிழில் மிக சிறந்த மந்திரம் உள்ளது.
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.
நான் தயவு செய்து
சொல்லுகிறேன்.
தவறமால் இந்த
மந்திரத்தை தினமும் சொல்லுங்கள்.
நம்பிக்கையுடன்
சொல்லுங்கள். கண்டிப்பாக மாற்றம் உண்டாக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.
இதை படிப்பதால்
நாம் ஒன்றும் இழந்து போகப்போவிதில்லை.
ஆனால் இதை படிக்கும்
போதும் உடல் நலிவுற்றவர் கேட்க்கும் போது அவருக்கு ஓரு நம்பிக்கை
கிடைக்கும்.
Comments
Post a Comment