அட்சய திருதியை : இந்த நாளில் வெற்றிலை, மஞ்சள், கல் உப்பு இதையெல்லாம் வாங்குவுது அவசியம் , ஏன்?
அட்சய திருதியை : இந்த நாளில் வெற்றிலை, மஞ்சள், கல் உப்பு இதையெல்லாம் வாங்குவுது அவசியம் , ஏன்?
அட்சய திருதியை நாளில் அந்த பொருள்களையும் வாங்குவுது மூலம் அன்னை மஹாலட்சுமியின் சாந்தித்யத்தை நம் வீட்டுக்கு அழைக்கலாம்.
இன்று அட்சய திருதியை .சித்திரை மாதம் வளர்பிறை திரிதியையே அட்சய திருதியை என்று போற்றப்படுகிறது.
மஹாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது திரௌபதி சூரிய பகவானை வேண்டி பாத்திரத்தைப் பெற்ற நாள் அட்சய திருதியை என்று சொல்லப்படுகிறது.
‘சயம்’ என்றால் “அழிதல்”. ‘அட்சயம்’ என்றால் “அழியாதது”அல்லது குறையாதது என்று பொருள் .
எது அழியாமல் பல்கி பெருகுகிறதோ அதுவே “அட்சயம்” எனப்படும்
இந்த நாளில் வாங்கும் எதுவும் வாழ்வில் குறைவில்லாது நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்.
அதனால்தான் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவுது மங்களகரமானதாகப் பார்க்கப்படுகிறது காரணம் தங்கத்தில் மஹாலட்சுமியின் வாசம் செய்வதாக ஐதீகம்.
ஆனால் தங்கத்தில் மட்டும்மல்ல மேலும் பல்வேறு பொருள்களில் அன்னை மஹாலட்சுமியின் சாந்நித்யம் நிறைந்து விளங்குகிறது.
அட்சய திருதியை நாளில் அந்த பொருள்களையும் வாங்குவுது மூலம் அன்னை மஹாலட்சுமியின் சாந்தித்யத்தை நம் வீட்டுக்கு அழைக்கலாம்.
வெற்றிலையின் மேற்புறம் , விபூதி ,வில்வம், மஞ்சள் அட்சதை, பூரணகும்பம், தாமரை, தாமரைமணி, ஜபமாலை ,வலம்புரி சங்கு, மாவிலை, தர்ப்பை, குலைவாழை, துளசி ,தாழம்பூ, ருத்திராட்சம், சந்தனம் ,காய்ச்ய பால்,நெய்,கல் உப்பு என
பொருள்களை என்று 108 பொருள்களையும் அன்னை மஹாலட்சுமியின் சாந்நித்யம் நிறைந்த பொருள்களாக நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர்.
இவை அனைத்துமே முக்கியத்துவம் வாய்ந்தவை அன்னையை வழிபடும் போது இந்த பொருள்களைக் கொண்டு வழிபடுவது என்பது மேலும் பல நன்மைகளை நமக்கு அளிக்கும்.
இந்த ஆண்டு அட்சய திருதியை தினத்தில் கடைகளுக்கு சென்று தங்கம் முதலியன வாங்க முடியவில்லை என்பதால் வருந்த தேவையில்லை.
வீட்டின் அருகில் இருக்கும் கடைகளில் மேற்சொன்ன பொருள்களில் எதையேனும் ஒன்றை வாங்கினாலே அது மங்களத்தைப் பெருக்குவதாகக் அமையும்.
மேலும் இந்த நாள்களில் செய்யும் தானத்தின் புண்ணிய பலன் பல்கி பெருகும் என்கின்றன சாஸ்திரங்கள்.
அட்சய திருதியை தினத்தில் தானம் செய்த திருடன் ஒருவன் அரச வாழ்வு பெற்றான் என்கின்றன சாஸ்திர நூல்கள் .
எனவே என்பது நம்முடைய நற்செயல்களால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை, நற்செயல்களை, அதிகப்படுத்தும் நாள் என்பது நம்பிக்கை.
Comments
Post a Comment